இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான உள்ளகப் பொறிமுறை எதிர்வரும் ஜனவரி மாத இறுதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை நிறைவுக்கு வந்த பின்னர், உள்ளகப் பொறிமுறையை அமைத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு உள்ளிட்ட உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு உள்ளகப் பொறிமுறையின் இறுதி வடிவம் தீர்மானிக்கப்படும் என்று நீதியமைச்சர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் ஆகியோர் அடுத்த வருடம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், அவர்களது விஜயத்துக்கு முன்னதாக உள்ளகப் பொறிமுறையை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் முனைப்புக்களை வெளியிட்டுள்ளது.

0 Responses to உள்ளகப் பொறிமுறை எதிர்வரும் ஜனவரி இறுதியில் ஆரம்பிக்கப்படும்: விஜயதாச ராஜபக்ஷ