Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.எஸ். (ஐ.எஸ்.ஐ.எஸ்- IS(ISIS)) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில் 34 நாடுகளின் ஒத்துழைப்புடன் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பினை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பினை சவுதி அரேபியா ஏற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையுடன், தீவிரவாதத்தை எல்லா விதத்திலும் ஒழித்துகட்ட தொடங்கப்படும் இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு சவுதி அரேபியா தலைமை தாங்கும்.

இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்புக்கு பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், மாலைதீவுகள், பஹரைன் உள்பட தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 34 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. மாலி, சோமாலியா, சாட், நைஜீரியா போன்ற நாடுகளும் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன.

ஈரான் இந்த கூட்டமைப்பில் சேரவில்லை. ஊழலில் ஈடுபடுவதும், உலகில் பேரழிவு ஏற்படுத்துவதும் பாவச்செயல் என்பது இஸ்லாம் கொள்கை. தீவிரவாதம் என்பது மனித குலத்தின் மீது ஏவப்படும் கடுமையான அத்துமீறல். வாழ்க்கை பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துவதும், உயிரை பறிப்பதும் கொடியது.” என்றுள்ளது.

0 Responses to ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக ‘இஸ்லாமிய இராணுவ கூட்டமைப்பு’ உருவாக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com