Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எமது நாட்டில் முட்டாள் சிங்கள பௌத்தர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அறிவிலிகளாக செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, “எமது நாட்டில் முட்டாள் சிங்கள பௌத்தர்கள் இருக்கின்றனர். முட்டாள் முஸ்லிம்களும் இருக்கின்றனர். முட்டாள் தமிழர்களும் இருக்கின்றனர். மன்னிக்கவும், அறிவிலியாக செயற்படுவதை நாம் நிறுத்த வேண்டும். எமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வோம். எமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்வோம். ஏனையவர்களின் தனித்துவத்திற்கும் மதிப்பளிப்போம். அந்தத் தனித்துவங்களும் மேம்பட இடமளிப்போம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தேசமாக நாம் பயணிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் முட்டாள் சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றார்கள்: சந்திரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com