இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளதான குற்றச்சாட்டுக்களை சரத் பொன்சேகா தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றார். இது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஆற்றிய பாராளுமன்ற உரையிலும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ, “வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய வேண்டும். முறையான சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே போரை முன்னெடுத்தோம். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். அவர் இத்தகைய கருத்துக்களை முன்வைப்பது புதிய விடயமல்ல, அவர் முன்னர் அமெரிக்கா சென்றிருந்த போதும், இதனையே வலியுறுத்தியிருந்தார்.
வெள்ளைக் கொடி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, சரத் பொன்சேகா என்னை குற்றவாளியாக சித்திரிக்கவே, உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இவ்வாறு கூறி வருகின்றார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.
0 Responses to வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்னைக் குற்றவாளியாக்க சரத் பொன்சேகா முயற்சி: கோத்தபாய ராஜபக்ஷ