தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் என்கிற கருத்து சிங்கள மக்களிடம் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப்பட்டிருக்கின்றது. அது, முற்றிலும் தவறானது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பகுதிகளிலுள்ள 701 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று சனிக்கிழமை தெல்லிப்பளை நடேஷ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே வடக்கு முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக சில நன்மைகளைப் பெற்றுவருவதை நன்றியறிதலுடன் நினைவுகூருகின்றேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எமது மக்களின் துன்ப துயரங்களையும் அவர்களின் அல்லற்பாடுகளையும் நீங்கள் (மைத்திரிபால சிறிசேன) நேரில் கண்டும் விசாரித்தும் அறிந்து கொண்டவர் என்ற வகையில் இந்த மக்களுக்கான ஒரு இயல்பு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதை நீங்கள் செவ்வனே செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள், அவர்கள் எந்த நேரமும் சிங்கள மக்களை வெறுப்புணர்வுடன் நோக்குகின்றார்கள் என்ற ஒரு தவறான கருத்து எமது முன்னைய அரசியல் தலைவர்களால் சிங்கள மக்கள் மத்தியில் வேண்டுமென்றே விதைக்கப்பட்டிருந்தது. இத் தவறான கருத்தை சிங்கள மக்களின் மனத்திலிருந்து நீக்குவதற்கு இன்றைய அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும். அரசியல் இலாபத்துக்காகவே அவ்வாறு அவர்கள் செய்தார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இராணுவத்தினரை நாம் வெறுக்கவில்லை. ஆனால், இராணுவ கெடுபிடிகளை முற்றாக எதிர்க்கின்றோம். சிங்கள மக்களை நாம் எதிர்க்கவில்லை. பேரினவாத அடக்குமுறைகளை மட்டுமே கண்டிக்கின்றோம் என்ற செய்தியை அனைத்து சிங்கள மக்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
இன்று விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளைப் போன்று வலிகாமம் வடக்கில் மட்டும் எஞ்சியுள்ள 4700 ஏக்கர் காணிகளையும் படிப்படியாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் மீள கையளிக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதைவிட வடக்கு மாகாணம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுபடவேண்டிய நிலையில் உள்ளன.
எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்டையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையின் வரலாற்றில் சாதனைகள் படைத்த ஜனாதிபதி என்று உங்களை சரித்திரம் அடையாளம் காட்ட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல: சி.வி.விக்னேஸ்வரன்