Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் அனைத்துச் சந்தர்பங்களிலும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பும் போதிய அளவு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தான் முழுமையான உத்தரவாதம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரத்தில் இடம்பெற்ற இருவேறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தனது கண்டனத்தை வெளியிடுகின்றது.

சர்வதேச பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த டிசம்பர் மாதம் முதல் விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமானப் படை, எயார் லைன்ஸ் நிறுவனம், குடிவரவு, குடியகல்வு, சுங்கதிணைக்களங்களினதும் ஆலோசனைகள் பெறப்பட்டு ஒன்றிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் இது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து குறைப்பாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்துகொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக கிடைக்கப் பெறும் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பிலும் புலனாய்வுதுறையினர் அவதானத்துடன் செயற்படும் அதேசமயம், விசாரணைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை; பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com