Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஆனாலும், அதற்கான பொறிமுறை முன்னெடுக்கப்படுவதைக் குழப்புவதற்கு சில அரசியல் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை நோக்கி முன்நகர வேண்டுமாயின் யுத்தம் பற்றிய பின்னணி மற்றும் அது குறித்த ஏதுக்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச உண்மை அறியும் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமையை சீர்குலைப்பதற்கு சில அரசியல் தலைமைகள் முயற்சித்து வருகின்றன. யுத்தத்தின் பின்னரும் யுத்தத்தின்போதும் சில அரசியல் தரப்புகள் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றன.

யுத்தம் காரணமாக உறவுகளைப் பிரிந்தவர்கள், காணாமற்போனவர்கள் வடக்கு, கிழக்கில் மட்டும் இல்லை. தெற்கிலும் இருக்கின்றார்கள். புதிய அரசாங்கம் உண்மையைக் கண்டறிவது தொடர்பிலான பொறிமுறைமையை உருவாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் வெறுமனே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டபோதிலும் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைக் குழப்புவதற்கு சில தலைவர்கள் முயற்சி: சந்திரிக்கா குமாரதுங்க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com