Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு பகுதியில் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் வடக்கு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' எனும் தலைப்பில் தெற்கு ஊடகவியலாளர்களையும், வடக்கு ஊடகவியலாளர்களையும் இணைக்கும் நல்லிணக்கப் பயணம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.

கொழும்பிலிருந்து விசேட ரயிலில் யாழ்ப்பாணம் நோக்கி ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் புறப்பட்ட தெற்கு ஊடகவியலாளர்கள், நேற்று மாலை 04.00 மணியளவில் யாழ்ப்பாணத்தை அடைந்தனர். இதன்போது, ஊடக அமைச்சர் தலைமையிலான தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்கு ஊடகவியலாளர்களினால் பெரியளவில் வரவேற்கப்பட்டனர்.

இதன்போதே, வடக்கு ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to வடக்கு ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதி விசாரணை வேண்டும்; ஊடக அமைச்சரிடம் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com