Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளுக்கு நாள் பாரிய சவாலாக மாறிவரும் சூழல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சூழல் பாதுகாப்பு தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ள விசேட துறைகள் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. சூழல் மாசடைதல் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள சட்ட விதிகளை அதிகரிக்கும் தேவை பற்றி இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

நிலையான சூழல் பாதுகாப்பு தொடர்பில் பல்கலைக்கழக சமூகத்தினால் இனங் காணப்பட்ட முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வாக முன் வைக்கப்படும் யோசனைகள் இதன்போது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

புவி வெப்பமடைதல் மற்றும் காபன் உறிஞ்சப்படுவதை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விளை திறனுடைய நடவடிக்கைகள், இயற்கைவளப் பாதுகாப்பு, முறையற்ற கிருமிநாசினிப் பாவனை, கழிவுப் பொருட்களை அகற்றுதல் மற்றும் முகாமைத்துவம், பசுமை நுகர்வு, தேசிய சுற்றாடல் கொள்கைகளை சர்வதேச சூழல் ஒப்பந்தங்களுடன் இயைபாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதில் உள்ளடங்கும்.

0 Responses to சூழல் பாதுகாப்புக் கொள்கைகள் தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com