நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கைளிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளாக அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை நாட்டு மக்கள் முற்றாக நிராகரித்திருப்பதாகவும், உண்மையான ஜனநாயகம் பிரதிபலிக்கக் கூடியதான அரசியலமைப்பின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள கட்சித்தாவல் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தலில் தோல்வி கண்டவர்கள் மாற்று வழிமூலம் பாராளுமன்றம் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் சகல மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்தறியும் அமர்வுகளில் மேற்கண்ட மூன்று விடயங்களுமே மேலோங்கிக் காணப்பட்டதாகவும் லால் விஜேநாயக்க கூறியுள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும், சபாநாயகரும் அரசியலமைப்புச் சபையின் தலைவருமான கரு ஜயசூரியவிடமும் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர், லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு நேற்று புதன்கிழமை விசும்பாயவில் ஊடகச் சந்திப்பை நடத்தியது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பொன்றை தயாரிக்கும் பொருட்டு 2015 டிசம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுவுக்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன். என்னுடன் 20 பேர் உள்வாங்கப்பட்டனர். இதில் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் பலரும் உள்ளடக்கப்பட்டதோடு அரசியல்வாதி ஒருவரும் நியமிக்கப்பட்டார். எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை 2016 ஜனவரி 4ஆம் திகதியன்று ஆரம்பித்தோம். நாம் இதற்காக 20 விடயங்களைக் கொண்ட வினாக்கொத்தொன்றை தயாரித்து அதனடிப்படையில் மக்களின் கருத்தை அறிய நடவடிக்கை மேற்கொண்டோம்.
முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் எட்டு நாட்களை ஒதுக்கி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களில் தலா இரண்டு நாட்கள் தங்கி வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டோம். இக்கால எல்லை மக்களின் கருத்தறிய போதுமானதல்ல என்பதை நாம் நன்கறிவோம். ஆனால், உரிய காலத்தில் அறிக்கையை தயாரித்து முடிக்க வேண்டிய நிலையில் கால அவகாசத்தை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு மக்கள் சந்திப்பின் போதும் பெரும் தொகையான மக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். இது தவிர எழுத்து மூலமும் பலர் தமது கருத்துக்களை தபால் மூலமும் மின்னஞ்சல், தொலைநகல்கள் மூலமும் தமது யோசனைகளை சமர்ப்பித்தனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள் ஐயாயிரத்தைத் தாண்டியது. அறிக்கையை தயாரிக்க நடவடிக்கை எடுத்த நிலையிலும் மக்கள் கருத்துக்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.
இதிலிருந்து மக்கள் அரசியலமைப்பு, அரசியல் இரண்டிலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர் என்பதை அவதானிக்க முடிந்தது. இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியலமைப்பொன்றை உருவாக்க மக்கள் கருத்தறியும் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தது. பிரதமரின் ஆலோசனைக்கமையவே இது அமைக்கப்பட்டது.
மக்களின் கருத்துக்களை நாம் திரிபுபடுத்தாமல் மும்மொழிகளிலும் பதிவு செய்துள்ளதோடு எமது குழுவின் சிபாரிசுகளையும் முன்மொழிந்துள்ளோம்.
மக்கள் சமர்ப்பித்த யோசனைகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதகால உழைப்பின் பிரதிபலன் தற்போது பிரதமர், சபாநாயகர், அரசியலமைப்புச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதியன்று ஜனாதிபதியை சந்தித்து அறிக்கை கையளிக்கப்படும்.
அரசியலமைப்புச் சபையிடமே அடுத்த பணி உள்ளது. எமது ஆரம்ப பணிகளை நிறைவு செய்துள்ளோம். எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சபையின் நிபுணர்கள் குழு இவ்விடயங்களை ஆராயும் போது எமது ஒத்துழைப்பு கோரப்பட்டால் அதனை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். நாட்டு மக்கள் சிறப்பான அரசியலமைப்பொன்றை எதிர்பார்க்கின்றனர். அது ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு அதிகாரம் பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் கருத்தறியும் குழு!