Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சராக இருந்த போது (2009ஆம் ஆண்டு காலப்பகுதியில்) அவரது அமைச்சக செயலர் ஒருவரினால் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் சிட்னி மோர்னிங்க் ஹெரால்ட் (Sydney Morning Herald) என்கிற செய்தி இணையத்தளமே மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியால் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to ஆஸி ஊடகம் வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் எதுவும் தெரியாது: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com