இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் (அனுமான் பாலம்) அமைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்று நாட்டு மக்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.
உதய கம்மன்பிலவின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிடவில்லை. இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு அமைச்சர்கள் மற்றும் எமது நாட்டில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒருவர் என மத்திய அரசில் அங்கத்துவம் வகிக்கும் மூவரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மையப்படுத்தியே நான் ஊடகவியாலாளர் சந்திப்புக்களில் இவ்வாறு அனுமான் பாலம் தொடர்பிலாக கருத்து வெளியிட்டிருந்தேன்.
மஹாராஷ்ராவை பிரநித்தித்துவப்படுத்தும் இந்திய பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்தும் இந்திய சிறுபோக மற்றும் பெரும்போக விவசாயத்துறை அமைச்சர் கல்ராஜ் மிஷ்ராய் மூன்றாவதாக அமைச்சர் கபீர் ஹாசிம் என அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள் என மூவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த விடயம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி இந்த விடயங்களை மறுக்கின்றார்.
மகாகவி பாரதியாரின் கவிதை வரி ஒன்றும் இலங்கைக்கு பாலம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதேநேரம் இவ்வறானதொரு பாலம் அமைக்கப்பட்டால் அதனால் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கப்படும். இலங்கை இந்தியாவின் 30வது பிராந்தடியமாகிவிடும்.
இந்த பாலம் அமைக்கும் விவகாரத்தை இலங்கை மறுக்கின்ற போது இந்தியா இந்த விடயத்தில் முழு மூச்சாக செயற்படுகின்றது. இதனால் இலங்கையை பார்க்கிலும் இந்த பாலத்தின் வாயிலாக இந்தியாவிற்கு கிடைக்கபோகும் நலன்கள் அதிகம் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
அதனால் தான் பாலம் அமைக்கும் செயற்பாட்டின் மொத்த செலவீனங்களையும் ஏற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. அந்நாட்டின் இந்த நிலைப்பாடும் பாலம் அமைப்பதால் அதிக பலன்களை இந்தியாவே அடையும் என்பதை காட்டுகின்றன. இதற்கு முன்னரும் 1987ஆம் ஆண்டுகளில் இந்தியா இலங்கைக்கு பலாத்காரமாக ஹெலிகப்டர் ஊடகா சாப்பாட்டு பொதிகளை வீசியது அது ஒரு குறுகிய கால அச்சுறுத்தலாகவே அமைந்தது.
ஆனால், தற்போது பாலம் அமைக்கப்படுமாயின் அது இலங்கையின் மீதான நீண்டநாள் அச்சுறுத்தலாக மாறிவிடும். அதேநேரம் வேலையில்லாதவர்கள் தமிழ் நாட்டிலேயே அதிகம் உள்ளனர் அவர்களின் கவனம் எமதுநாட்டின் பக்கமாக திரும்பும் போது எமது நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடையும்.
வரலாற்று காலப்பகுதியிலும் கூட இலங்கையை ஆண்ட மன்னர்கள் இலங்கையை சுற்று பாதுகாப்பு மதில்கள் அமைக்க தீர்மானிக்கவில்லை. அதற்கு கடலாள் சூழ்ந்துள்ள இலங்கையின் அமைவிடமே காரணமானது. எனவே தற்கால ஆட்சியாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டின் மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பு எதிராக நாம் ஒன்று சகலரும் ஒன்று திரலும் முன்னர் குறித்த விவகாரம் தொடர்பிலான மெய்யான நிலைப்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.
நன்றி - வீரகேசரி

0 Responses to அனுமான் பாலம் தொடர்பில் இறுதி முடிவு என்ன?; மைத்திரியிடம் கம்மன்பில கேள்வி!