Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்யவே திமுகவினர் பேரவை வருவதாக அவதூறு பரப்புகிறார்கள் என்று, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் தமிழக சட்டப்பேரவை படும் பாடு என்கிற தலைப்பில் திமுகவினர் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்டன கூட்டம் நடத்துகின்றனர். நேற்று மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வாய்ப்பு அளிக்காத பட்சத்தில் உறுப்பினருக்கு எதிராகவோ, அல்லது அமைச்சருக்கு எதிராகவோ. அல்லது முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு எதிராகவோ வெளிநடப்பு செய்வது என்பது சட்டப்பேரவை மரபு.

வெளியில் வந்து பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களிடம் தங்களது கருத்துக்களைக் கூற உரிமை உள்ளது இது மரபு.நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டு வீட்டுக்கா சென்றுவிட்டோம், மறுபடியும் சட்டப்பேரவைக்குச் சென்று அவை நிகழ்வுகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால், திமுகவினர் வெளிநடப்பு செய்யவே சட்டப்பேரவை வருகின்றனர் என்று அவதூறு பரப்புகிறார்கள். இனி நாங்கள் என்ன நடந்தாலும் வெளிநடப்பு செய்யப்போவதில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

0 Responses to சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யவே பேரவை வருவதாக அவதூறு பரப்புகிறார்கள்: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com