சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ள சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் இருவரும் இப்போது சிங்கப்பூரில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் மீது வீட்டில் வேலைப்பார்த்த இரண்டு பணிப்பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், சசிகலா புஷ்பா நிர்வாணமாக இருந்துக்கொண்டு குடிபோதையில் தங்களை கை ,கால் பிடிக்கச் சொல்லி துன்புறுத்தினார் என்றும், அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என்றும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார் என்று சொல்லப்படும் சசிகலா மற்றும் அவரது கணவர் இருவரும் டெல்லியிலிருந்து சிங்கப்பூர் சென்று உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.எனவே, இந்த முன் ஜாமீன் மனு செல்லாது என்று பணிப்பெண்கள் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து ஜாமீன் மனு விசாரணையில், சசிகலா புஷ்பா வெளிநாட்டில் இருக்கும்போது தாக்கல் செய்யப்பட்ட மனு என்று குற்றச்சாட்டு வைத்ததன் பேரில் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் எடுத்து வைத்த போதிலும், நீதிபதிகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் மகன் மூவரும் வருகிற 29ம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்படி அவர்கள் ஆஜராகவில்லை என்றால், முன்ஜாமீன் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to முன்ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில்:சசிகலா புஷ்பா எம்பி மற்றும் அவரது கணவர் இருவரும் சிங்கப்பூரில்!