இலங்கை அரசியலமைப்பில் இருப்பதற்கு தகுதியற்ற சட்டம் என்று விமர்சிக்கப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இரா.சம்பந்தன், நாளை வெள்ளிக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடனும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

0 Responses to தகுதியற்ற சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: சம்பந்தன்