உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என்று, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில், இன்று பாஜகவினர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்போது பேசிய தமிழிசை, கர்நாடக அரசுக்கு எதிரான நேற்றைய முன்தின நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி விக்னேஷ் தீக்குளித்து, நேற்று உயிரிழந்தமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.
அப்போது மக்கள் மற்றும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் செய்வதைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், நேற்று பெய்த ஒரே மழைக்கு சென்னை சாலைகள் நீரில் மிதக்கிறது கவலை அளிப்பதாக உள்ளது என்றும், மழை வெள்ளம் வர நேரிட்டால் சென்னை தாங்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும்: தமிழிசை