வன்முறை போராட்டத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தினை தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில தலைமை செயலாளர்கள், இரு மாநில டிஜிபிக்கள் விளக்கமளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
காவிரி பிரச்சனையை இரண்டு மாநில ஊடகங்களும் கையாண்ட விதம் வருத்தமளிப்பதாக கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், உச்சநீதிமன்ற உத்தரவை இரண்டு மாநிலங்களும் கையாண்ட விதம் குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழகத்துக்கு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கர்நாடக அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு வன்முறை நிலவியது. இதே போன்று தமிழகத்திலும் கர்நாடக அமைப்புக்களின் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஒரு சில நாட்களில் அங்கங்கு போராட்டம் நடைப்பெற்று, அதிலும் வன்முறை நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வன்முறை - போராட்டத்தால் ஏற்பட்ட சேதம்- பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தேவை: தேசிய மனித உரிமைகள் ஆணையம்