இருப்பிடம் இல்லாதவர்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இருப்பிடம் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இல்லை என்றும், இருப்பிடம் இல்லாதவர்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம், அதுவும் பிறந்த குழந்தை உட்பட அனைவருக்கும் ஆதார் அட்டை பெறும் உரிமை உள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது வசிப்பிடம் இல்லாதவர்கள் ஊராட்சி அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் இவர்களிடம் தங்களது நிலைமையை தெரிவிக்கலாம் என்றும், அவர்கள் மீது சந்தேகம் இல்லாத பட்சத்தில் விசாரணை செய்து ஆதார் அட்டை விண்ணப்பிக்க பரிந்துரை செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
மேலும், தெரிந்த நபர்கள் வசிப்பிடம் இல்லாதவர்களுக்கு தங்களது ஆதார் எண்ணை விண்ணப்பத்தில் இணைத்து ஆதார் அட்டை பெற பரிந்துரை செய்யலாம் என்றும் மத்திய அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டையை இ சேவை மூலம் பெறும் வசதியை மத்திய அரசு மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும் அறிவித்துள்ளன என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.

0 Responses to இருப்பிடம் இல்லாதவர்களும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு