முதல்வர் உடல்நலத்தை விசாரிக்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன், பெயர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரது உடல்நிலைக் குறித்து அறிய மருத்துவ மனைக்குச் சென்றிருந்தார் திருமாவளவன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முதல்வர் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அங்கு எந்தவித கெடுபிடியும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும்,அங்கு தங்கியிருந்த அதிமுகவின் மூத்த தலைவர்கள் தம்மை வரவேற்றனர் என்றும், அவர்கள் முதல்வர் அம்மா அவர்கக்ள் நலமுடன் உள்ளார் என்றும் கூறியதாக திருமாவளவன் கூறியுள்ளார்.அதிமுகவின் மூத்த தலைவர்கள் யார் அவர்களது பெயரைக் கூறுங்கள் என்று கேட்டபோது, மூத்த தலைவர்கள் அவ்வளவுதான், பெயர்களைக் கூற முடியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

0 Responses to அதிமுக மூத்த தலைவர்களை சந்தித்தேன்; பெயர் வேண்டாம்: தொல்.திருமாவளவன்