2005 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியின் சேன்சலராகப் பதவி வகித்து வரும் ஏஞ்சலா மேர்கெல் வெகு விரைவில் 4 ஆவது முறையாகவும் இப்பதவியில் நீடிக்கும் அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிய வருகின்றது.
தனது ஆட்சிக் காலத்தில் மேர்கெல் ஐரோப்பாவை மிகத் திறமையாக Eurozone பிரச்சினையைக் கடக்க பங்களிப்பு செய்தவர் என்பதுடன் 2 ஆவது உலக மகா யுத்தத்துக்குப் பிறகு மிகவும் அக்கறையுடன் நிகழ்கால உலக அகதிகள் பிரச்சினையையும் கையாண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் மாநாட்டில் தனது அறிவிப்பை ஏஞ்சலா மேர்கெல் வெளியிடுவார் என அவரது Conservative christian democratic எனப்படும் CDU என்ற கட்சி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
62 ஆவது வயதை உடைய மேர்கெல் 4 ஆவது முறையும் பதவியில் நீடித்தால் அவரது மிகப்பெரிய சவாலாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்வதுதான் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போது மேர்கெல்லின் திறந்த வர்த்தகக் கொள்கை முதல் ஜேர்மனி மீதான ரஷ்யாவின் குடிவரவுக் கொள்கை வரை அனைத்தையும் விமர்சித்திருந்தார். இதேவேளை அமெரிக்காவின் தற்போதைய அதிபரான பாரக் ஒபாமாவுடன் மிக நெருக்கமான அரசியல் இராஜதந்திர உறவை ஏஞ்சலா மேர்கெல் பேணி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 4வது முறையாகவும் ஜேர்மனியின் சேன்சலராகப் பதவி வகிக்கும் அறிவிப்பை வெளியிடவுள்ள ஏஞ்சலா மேர்கெல்!