வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்கதேசத்தை புயல் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று மையம் கொண்டு இருந்தது.
அந்த புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும், பின்னர் மேலும் வலுவடைந்து திசைமாறி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று வங்கதேசத்தை தாக்கும் என்றும் டெல்லி வானிலை ஆய்வு மைய புயல் எச்சரிக்கை பிரிவின் தலைவர் எம்.மகோபத்ரா நேற்று தெரிவித்தார்.
இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இன்று (நவம்பர் 4 முதல் 6-ந் தேதி வரை 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to வங்கதேசத்தை புயல் தாக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை