Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2004ஆம் ஆண்டு நத்தார் தினத்துக்கு மறுநாள் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின், 12வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாடெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு உடுத்துறையிலுள்ள சுனாமியில் உயிரிழந்தவர்கள் நினைவு மயானத்தில் இன்று திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில், உயிரிழந்தவர்களின் பெற்றோர், பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் நாட்டின் கரையோரப் பகுதிகள் எங்கும் நடைபெறுகின்றன.

சுனாமிப் பேரலை அனர்த்தத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் பலியானார்கள்.

0 Responses to சுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது நினைவு தினம் நாடெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com