Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கிறித்தவ காலனியான டொபா டெக் சிங் சிட்டி என்ற இடத்தில் டிசம்பர் 24 ஆம் திகதி இரவு நத்தார் விருந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கானவர்கள் சட்டவிரோதமான டாக்ஸிக் கலந்த மதுவை (toxic liquor) அருந்தியதால் பரிதாபமாக குறைந்த பட்சம் 30 பேர் பலியானதுடன் 60 இற்கும் அதிகமானவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்.

பலியானவர்களில் பலர் கிறித்தவர்கள் ஆவர். தற்போது பாகிஸ்தான் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளனர். மேலும் இந்த மதுவைத் தயாரித்த ஓர் தந்தையும் மகனும் கைது செய்யப் பட்டுள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் அல்கஹோல் விற்பனையானது அங்கு முஸ்லிம்களுக்குத் தீவிரமாகத் தடை செய்யப் பட்ட ஒன்று என்பதுடன் சிறுபான்மை குழுக்களுக்கும் வெளிநாட்டவருக்கும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் விற்கப்பட்டும் வருகின்றது. மார்ச் மாதம் பாகிஸ்தானின் சிந்த் மாகாணாத்தில் ஹோலி பண்டிகையின் போது தடை செய்யப் பட்ட மதுவை அருந்திய 45 பேர் பலியாகி இருந்ததுடன் இதில் 35 பேர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உகண்டாவில் கிறிஸ்துமஸ் தின விழாவில் காற்பந்து வீரர்கள் உட்பட 30 பேர் படகு விபத்தில் ஏரியில் மூழ்கிப் பலியாகி உள்ளனர். உகண்டா கொங்கோ எல்லையில்  ஓடும் ஏரியான அல்பெர்ட்டில் புலிசா மாவட்டத்தின் கவெய்பாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து காற்பந்து வீரர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என 45 பேர் ஓர் படகில் இசையை ரசித்தவாறு ஆடிப் பாடிய வண்ணம் படகில் சென்ற போது விபத்து  ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேர் நீரில் மூழ்கிப் பலியானதாகவும் வெறும் 15 பேர் மாத்திரமே உயிர் தப்பிக் கரை சேர்க்கப் பட்டிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 9 சடலங்களும் இதுவரை கைப்பற்றப் பட்டுள்ளன.

0 Responses to நத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com