Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நத்தார் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னமெரிக்க நாடான சிலியின் தென் கடலோரப் பகுதிகளில் 7.6  ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காலை 11.22 மணியளவில்

தாக்கியதை அடுத்து பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப் பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS இன் எச்சரிக்கையை அடுத்து தமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கைவிட்டு விட்டு 5000 இற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பல இடங்களில் சாலைகளில் பாரிய விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து  பாதிக்கப் பட்டுள்ளதுடன் 21 000 இற்கும் அதிகமான வீடுகளில் மின் துண்டிக்கப் பட்டுள்ளது. சிலி அதிபர் மிச்சேல் பாச்லெட் அந்நாட்டில் அவசர நடவடிக்கைகள் துரிதப் படுத்தப் பட்டுள்ளதாகத் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் வீடுகளும் கட்டடங்களும் இடிந்து வீழ்ந்த போதும் பொது மக்கள் பலியானதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.  இதேவேளை பிலிப்பைன்ஸிலும் நத்தார் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தைஃபூன் புயலான நொக் டென் துவம்சம் செய்து 4 பேரின் உயிரைப் பலி வாங்கியுள்ளது.  ஆசியாவின் மிகப் பெரிய கத்தோலிக்க தேசமான பிலிப்பைன்ஸில் தைஃபூன் நொக் டெக் காரணமாக பல வீடுகள் சேதமுற்றும் தலைநகர் மனிலா உட்பட 5 மாகாணங்களில் மின் துண்டிக்கப் பட்டும் 10 000 கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கைவிட்டு விட்டு இடம்பெயரவும் நேர்ந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை பிலிப்பைன்ஸில் நொக் டெக் புயல் சற்று பலவீனமுற்ற போதும் வலிமையான காற்று வீசி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அல்பேய் இலுள்ள அதிகாரிகள் கூற்றுப் படி 150 000 இற்கும்  அதிகமான கிராமத்தவர்கள் நொக் டெக் புயல் காரணமாக இடம்பெயர்ந்திருப்பதாகவும் குறித்த பகுதிகளில் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டு அவர்களுக்கு இயன்ற அடிப்படை உதவிகள் வழங்கப் பட்டு வருவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ரிங் ஆஃப் ஃபைர் என அழைக்கப் படும் பசுபிக் கடலின் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸில் ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 20 தைஃபூன் புயல்கள் தாக்கி வருகின்றன. கடந்த 65 வருடங்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் 7 தைஃபூன் புயல்கள் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நத்தார் தினத்தில் சிலியைப் புரட்டிப் போட்ட பூகம்பம்!: பிலிப்பைன்ஸில் 4 பேரைப் பலி கொண்ட தைஃபூன் நொக் டென்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com