Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற கத்தோலிக்கர்கள் இயேசு பாலகனின் பிறந்த தினமான நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ந்துள்ளனர்.

இத்தினத்தில் இக்கத்தோலிக்கர்கள் அனைவரினதும்  ஆன்மிகத் தலைவரான போப் ஃபிரான்சிஸ் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வத்திக்கான் நகரிலுள்ள செண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் சிறப்புப் பிரார்த்தனையை நிறைவேற்றிய பின் பல ஆயிரக் கணக்கான மக்கள் முன் உரையாற்றினார். அந்த உரையின் சுருக்கம் வருமாறு :

பகையுணர்ச்சி மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி என்பவற்றை இந்நன்னாளில் உலக மக்கள் அனைவரும் கைவிட வேண்டும். முக்கியமாக இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் இந்த உணர்வுகளைக் கைவிட வேண்டும். மேலும் சிரியாவில் நடைபெறும் மோதல்கள் நிறுத்தப் பட வேண்டும். அங்கு அளவுக்கதிகமாக இரத்தம் சிந்தப் பட்டு வருகின்றது. சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இடம்பற்று வரும் மோதல்களை தீவிரமான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச சமூகம் முன் வர வேண்டும்.

ஜேர்மனியின் பேர்லின் துருக்கி போன்ற நாடுகளில் அண்மையில் நடத்தப் பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை. பேர்லின் டிரக் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். இவ்வாறு தெரிவித்த பாப்பரசர் உலகில் பகைமை பாராட்டி வரும் குழுக்கள் முக்கியமாக இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும், உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்களும் அந்நாட்டு மக்களும் மற்றும்  நைஜீரியா மக்கள் என அனைத்துத் தரப்பும் இணைந்து வரலாற்றை மாற்ற முன் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

பாப்பரசர் ஃபிரான்சிஸ் இன் உரை காணொளி இணைப்பு : http://time.com/4617843/pope-francis-christmas-message/

0 Responses to கிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை! : சுருக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com