பொது மக்களின் போராட்டங்களை தடுத்து ஒடுக்கும் நோக்கில் தெற்கில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கு- கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றிவரும் அரசாங்கம், அவற்றை தெற்கில் அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், இந்த மக்கள் எதிர்ப்பை தடுத்து ஒடுக்குவதற்காக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் நாட்களில் பசி காரணமாகவும், அரச சொத்துக்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது காரணமாகவும் மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்பதனை புரிந்து கொண்ட அரசாங்கம், தெற்கில் முகாம்களை நிறுவுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது. பயங்கரவாதம், பிரிவினைவாதம் காணப்பட்ட பகுதிகளிலேயே இராணுவ முகாம்கள் நிறுவப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் தெற்கில் இராணுவ முகாம்களை அரசாங்கம் அமைக்கிறது: மஹிந்த