கடந்த வியாழக்கிழமை தென் சீனக் கடற் பகுதியில் ஆழ் கடல் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா பயன்படுத்திய ஆளில்லா டிரோன் விமானத்தை உளவு சாதனம் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா கைப்பற்றியிருந்தது. இதை அடுத்து அமெரிக்கா மற்றும் சீனா இடையே மறுபடியும் புதிய ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
குறித்த டிரோன் கடல் ஆராய்ச்சிக்கானதே என அமெரிக்கா விளக்கம் அளித்ததுடன் சீனாவின் செயலைக் கண்டித்து டிரம்ப் ஆவேசமாக டுவீட்டும் செய்துள்ளார். குறித்த டுவீட்டில் இது சீனாவின் ஆத்திரமூட்டும் செயல் என்றும் நாம் சீனாவுக்குத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் அவர்கள் திருடிய டிரோன் எமக்குத் தேவையில்லை. அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும் என்றும் டிரம்ப் சாடியிருந்தார். இதைத் தொடர்ந்து பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்காக நாளைக்குள் டிரோனை விடுவித்து விடுவதாக சீனா அறிவித்துள்ளது.
தென் சீனக் கடற் பகுதி முழுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமான தனிப்பட்ட பகுதி அல்ல என்று இவ்வருடம் சர்வதேச கடல் சார் விவகாரத் தீர்ப்பாயம் உறுதி செய்திருந்தது. ஆனால் சீனாவோ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுடன் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருவதால் இப்பகுதியில் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தாம் கைப்பற்றிய அமெரிக்க டிரோனை கையளிக்க சீனா முடிவு : அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும், டுவிட்டரில் டிரம்ப் ஆவேசம்!