மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் முதலில் அதை இருகரம் கூப்பி வரவேற்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
திமுக இளைஞரணியின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசுகையில்,
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாணவச் செல்வங்களுக்கு எடுத்துச்சொல்வது, 'கனவு காணுங்கள், நிச்சயமாக வெற்றி பெற்று விட முடியும்' என்பதுதான். சாதாரணமாக கனவு காணுங்கள் என்று சொன்னால், முடியாததை பற்றி சொல்வதை அப்படி கூறுவார்கள். அது வழக்கமாக இருந்து வந்த ஒரு வார்த்தையாக இருந்தது. ஆனால், அதையே மாற்றி நமது அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள், நிச்சயமாக வெற்றி பெற்று விட முடியும்' என்று மாணவச் செல்வங்களான உங்களுக்கு குறிப்பிட்டு காட்டி இருக்கிறார். ஆக, ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும்.
இங்கே இருக்கக் கூடியவர்கள் உங்கள் உள்ளத்திலே இன்ஜீனியராக, டாக்டராக,
ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளாக வர வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்கள்.
என்னதான் அந்த நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று கருதிக் கொண்டு
இருந்தாலும், ஒன்றை நீங்கள் மறந்து விடக்கூடாது. இந்த நாட்டினுடைய நலனை
நீங்கள் மறந்துவிடக்கூடாது.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் நன்றாக
இருக்க வேண்டும் என்றால் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். நாடு நன்றாக
இருந்தால் தான் நாமும், நமக்கு பின்னால் வரக்கூடிய சந்ததியினரும் நன்றாக
இருந்திட முடியும். அந்த உணர்வை மாணவச் செல்வங்களாகிய, இளைஞர்களாகிய
நீங்கள் உங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான்
கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேநேரத்தில் உங்களை நான் இன்னொன்றும் கேட்டுக்கொள்ள விரும்புவது,
நீங்கள் அரசியல்வாதியாகளாகவும் வர வேண்டும் என்பதும் எனக்கு ஆசைதான்.
நீங்கள் அரசியல்வாதியாக வந்தால் முதலில் அதை இருகரம் கூப்பி வரவேற்கும்
முதல் நபராக நான் இருப்பேன்.
உங்களை நான் அரசியல்வாதிகளாக வர வேண்டும் என்று கூறுவதற்குக் காரணம்,
எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு அது ஊக்கத்தையும், உற்சாகத்தையும்
வழங்கிடும் வகையில் அமைந்திட முடியும். அதேபோல, உங்களைப் போன்றவர்களுக்கு
எங்களைப் போன்ற அரசியல்வாதிகளும் தேவைப்படுகிறார்கள். அதை நீங்கள்
மறந்துவிடக்கூடாது.
சில தினங்களுக்கு முன்பு இன்றைக்கு ஜனாதிபதியாக இருக்கக்கூடிய பிரணாப்
முகர்ஜி, அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்,
இந்திய தொழிற் கூட்டமைப்பின் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில்
அவர் பங்கேற்று உரையாற்றுகிற போது, ஒரு விஷயத்தை குறிப்பிட்டு
காட்டியிருக்கிறார்.
இந்திய நாட்டிலுள்ள 130 கோடி பேரில் பாதிக்கு மேல் 25- வயதுக்கு கீழ்
உள்ள இளைஞர்கள்தான் என்று குறிப்பிட்டு காட்டியிருக்கிறார். மேலும்,
அப்படிப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொறுப்பு
நம்மிடத்திலே இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பை அவர்கள் பெறவில்லை என்றால்
அமைதியின்மை என்ற சூழல் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டு
காட்டியிருக்கிறார்.
எனவே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி
ஏற்படுத்தி தருகிற முதல் கடமை அரசுக்கு இருந்திட வேண்டும். அரசு மட்டும்
அந்த கடமையை ஏற்படுத்தித் தர முடியுமா என்று கேட்டால் முடியாது. உங்களைப்
போன்றவர்கள் புதிய கண்டுபிடுப்புகளை கண்டுபிடித்தாக வேண்டும். புதிய
ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் வேலை வாய்ப்பினை பெறக்கூடிய
ஒரு சூழலை நாட்டிலே உருவாக்கிட வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்கள் நாட்டிலே உருவாக வேண்டும் என்று சொன்னால்,
உங்களைப் போன்ற மாணவர்கள் தான் அதனை செய்ய முன் வர வேண்டும். எனவே,
நீங்கள் வர வேண்டும், வெற்றிகளைப் பெற வேண்டும், அப்படிப்பட்ட ஒரு
சாதனையை ஏற்படுத்திட வேண்டும்.
இன்றைக்கு இந்த தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள், அரசியல்
கட்சிகளின் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த
தமிழகமும், இந்தியாவும் உங்களைப் போன்ற மாணவர்களை, இளைஞர்களை நம்பித்தான்
இருக்கிறது என்பதை நீங்கள் உங்கள் மனதிலே ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

0 Responses to மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் இருகரம் கூப்பி வரவேற்பேன்: ஸ்டாலின்