கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் பராமரிக்கப்பட்டு அதனை புனித பிரதசேமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பிரதேச மக்களால் முன்மொழியப்பட்டது.
அதன்படி பிரதேச மக்களின் முன்மொழிவை ஏற்ற இணைத் தலைமைகள், மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்துவதாகவும், அவற்றை பிரதேச சபையினூடாக பராமரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

0 Responses to மாவீரர் துயிலும் இல்லங்களை புனிதப் பிரதேசங்களாக பிரகடனப்படுத்த தீர்மானம்!