Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அஞ்சல் துறையில் அதிரடி சோதனை நடத்த வருமான வரித்துறை தமது அடுத்த குறியாக நிர்ணயித்துள்ளதாம். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றியதில் நடந்த முறைகேடுகள் குறித்து, அஞ்சல் துறை அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்துவர் என தெரிகிறது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8ல், மத்திய அரசு அறிவித்தது. இதனால், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை அதிகம் பதுக்கி வைத்திருந்தோர், செய்வது அறியாமல் திகைத்தனர். பழைய நோட்டுகளை, வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ள, அரசு, ஏற்பாடு செய்தது.
'
ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய் மட்டும் அதிக பட்சம் மாற்றலாம்' என்ற, நிபந்தனையால்,கோடிகளில் செல்லாத நோட்டுகளை பதுக்கி வைத் திருந்தோர், குறுக்கு வழியை தேடினர்.தங்கள் பினாமிகளை, கமிஷன் அடிப்படையில், வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்களில், வரிசையில் நிற்க வைத்து, பணத்தை மாற்றினர்.

இந்த நடைமுறையில்,தங்களிடம் உள்ள மொத்த பணத்தை மாற்ற முடியாது என்பதை உணர்ந்த பதுக்கல்காரர்கள், அரசு, தனியார் வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும் அஞ்சலக அதிகாரிகள், ஊழியர்களை, தங்கள் வலையில் வீழ்த்தினர். அவர்கள் மூலம், தங்கள் பணத்தை, கமிஷன் அடிப்படையில், மொத்தமாக மாற்றினர். இதுகுறித்த புகார்களை அடுத்து, வருமான வரித் துறை, சி.பி.ஐ., அதிகாரிகள், நாடு முழுவதும், கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

தனியார், அரசு வங்கி களில், அதிரடி சோதனை நடத்தினர். செல்லாத ரூபாய் நோட்டுகளை, சட்ட விரோதமாக மாற்றி கொடுத்த, அதிகாரிகளை கைது செய்தனர். அவர்கள், மூலம் பணம் பெற்ற, மோசடி பேர்வழிகளின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை தொடர்கிறது.

வட மாநில அஞ்சலகங்களிலும்,இது போன்ற முறைகேடு நடந்ததால், புலனாய்வு பிரிவினர், அஞ்சலக அதிகாரிகளின் வீடுகளில், சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர். தமிழகத்திலும், இது போன்ற முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, சந்தேகம் எழுந்துள்ளது.அதனால், தங்கள் விசாரணையை, சில  தினங்களுக்கு முன் துவக்கினர்.

சென்னையில் உள்ள அஞ்சலக கணக்குகள் பிரிவு அலுவலர்கள் சிலரிடம், வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு உள்ளது. இதனால், அஞ்சலக அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில், அடுத்தடுத்து சோதனை நடத்தப்படும் என, தெரிகிறது.

0 Responses to அஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com