Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சசிகலாவை பொதுச்செயலராக தேர்வு செய்தால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப் போம்' என, மாவட்ட, நகர செயலர்களிடம், கிளை பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவால், பன்னீர்செல்வம் முதல்வரானார். இதனால், கட்சியின் மூத்த நிர்வாகி, அ.தி.மு.க., பொதுச்செயலராவார் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பொதுச்செயலர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, தேர்வு செய்யும் வேலையில், மன்னார்குடி குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அமைச்சர்கள், மாவட்ட செயலர், பொதுக்குழு உறுப்பினர்களையும் வளைத்துள்ளனர்.அவர்களும், சென்னை, போயஸ் கார்டனில், சசிகலாவை சந்தித்து, பொதுச்செயலர் பதவியை ஏற்குமாறு, வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் இதை விரும்பவில்லை.இது குறித்து, கிளை கழக உறுப்பினர்கள் கூறியதாவது: எந்த தேர்தலாக இருந்தாலும், எந்த சிபாரிசையும் ஏற்காமல், கட்சி விசுவாசிகளை, ஜெயலலிதா வேட்பாளராக அறிவிப்பார். ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவ மனையில், செப்., 22, இரவு அனுமதிக்கப்பட்டார். அதே மாதம், 26ல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியானது.

பட்டியலில் இருந்த பலர், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், சசிகலா குடும்பத்தினர் சிபாரிசு செய்தவர்களாக இருந்தனர்.இது, தொண்டர்களிடம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும், வேட்பாளரை மாற்ற கோரி, பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற வழக்கால், உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட் டுள்ளது. தற்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால், கட்சியினர் வேதனையில் உள்ளனர். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், பொறுப்புகள், அரசு பதவிகளுக்கு வந்தோர், பதவியில் நீடிப்பதற் காக, பொதுச்செயலர் பதவியை ஏற்குமாறு, சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர். இது, எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.எனவே, கட்சியை வழி நடத்த சசிகலாவுக்கு வாய்ப்பு வழங்கினால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்.

அது, அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றால், முதல் முறையாக மாற்று கட்சியினருக்கு ஓட்டு போடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Responses to சசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்: அதிமுக கிளை பொறுப்பாளர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com