Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. பழைய 500,1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு ஊழல்வாதிகளுக்கு உதவியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக பேட்டி அளித்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த பலனும் ஏற்படவில்லை என ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏழை, நடுத்தர மக்களின் 2 மாத சிக்கல் இன்னும் தீரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். டிசம்பர் 30ல் நிலைமை சீராகும் என பிரதமர் சொன்னது பொய்யாகிவிட்டது. கறுப்புப் பணம் எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என்பதை பாஜக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் யார், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பணமதிப்பு ரத்து என்று அறிவிப்பு மிகப்பெரிய ஊழல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா புகார் தெரிவித்துள்ளார். எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் பிரதமர் அறிவித்து மக்களை வேதனைப்படுத்தி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அனைத்துக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என்று மம்தா கூறியுள்ளார். 50 நாள் ஆகியும் பண பரிவர்த்தனை மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். நாட்டின் வளர்ச்சி 50 நாட்களில் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மோத்தம் உள்நாட்டு உற்பத்தி அளவு மிகவும் குறைந்துவிட்டது என்று மம்தா கூறியுள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி, கள்ளநோட்டு புழக்கம் கறுப்புப்பணம் எதுவும் ஒழிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

0 Responses to ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்:முக்கிய கட்சிகள் அனைத்தும் பங்கேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com