Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை சென்னை - அண்ணாநகரில் நடைபெற்றது.இதில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக
விலகிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:'மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது.உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தோழமையும், நட்பும் என்றும் தொடரும் என்றார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தாலும் கூட்டமைப்பு தொடரும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து வைகோ மோடிக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

ஆனால், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.

0 Responses to மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com