முல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது.
கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில், கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது சுட்டிக்காட்டத்தக்கது.
அத்தோடு, காந்தி சிலையை அங்கு அமைக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த சிலை உடைத்துச் சோதமாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Responses to முல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப்பு!