இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் சில வரையறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், சட்டவாளர் இல்லாத நிலையில், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதிக்கும் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் பல விடயங்கள் குறித்து கரிசனைகளை எழுப்பியுள்ளோம். சட்டவாளர்கள் இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது, அனைத்துலக சட்ட நியமங்களின் படி 48 மணி நேரமாக உள்ள ஆரம்ப தடுப்புக்காவலை 72 மணித்தியாலங்களாக அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்களில் புதிய வரைவு கவலை தருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரையறைகள் தொடர்பில் ஐ.நா. கரிசனை!