தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சிறையொன்றை முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதுடன் 150 இற்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த கிளர்ச்சிக் குழுவுக்கு ISIS உடன் தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி சுமார் 100 இற்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய போராளிகள் அதிகாலை 1 மணிக்கு கிடாப்பவன் நகரிலுள்ள சிறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் இவர்களை உள்ளுர் முஸ்லிம் கிளர்ச்சிக் குழுத் தலைவர் வழிநடத்தியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முன்னால் பள்ளிக் கட்டடமான இந்த சிறைச்சாலையில் 1511 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளதாகவும் ஆனால் போதுமான காவலாளிகள் சேவையில் இல்லை எனவும் கூறப்படுகின்றது. கடந்த வருடம் சட்டவிரோத போதைப் பொருள் பாவித்த குற்றத்துக்காகவும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றத்துக்காகவும் தண்டிக்கப் பட்ட 3 கைதிகள் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனிலாவுக்கு தெற்கே 950 km தொலைவில் அமைந்துள்ள கிடாப்பவன் பலதரப்பட்ட முஸ்லிம் கிளர்ச்சிக் குழுக்கள் குற்றவாளிகள் மற்றும் கம்யூனிச போராளிகள் வசிக்கும் இடமாகும். புதன்கிழமை காலை தப்பிச் சென்ற கைதிகளைப் பின் தொடர்ந்து சென்ற பாதுகாப்புப் படையினரின் வேட்டையில் 6 கைதிகள் கொல்லப் பட்டதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to பிலிப்பைன்ஸ் சிறைத் தகர்ப்பில் 150 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்