2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனும் சர்வதேசத்துடனும் ஈரான் மேற்கொண்டிருந்த அணு ஒப்பந்தம் உடைந்தால் 4 நாட்களுக்குள் எம்மால் யுரேனியத்தால் ஆன அணுவாயுதங்களைத் தயார் செய்ய முடியும் என ஈரானின் அணு சக்தி நிறுவனத் தலைமை அதிகாரி அலி அக்பர் சலேஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த காலத்தில் ஈரானுடன் 2015 ஆம் ஆண்டு சர்வதேசம் மேற்கொண்டிருந்த அணு ஒப்பந்தத்துடன் உடன்பாடற்ற கருத்துக்களைத் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகின்றார். இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுவாயுத விவகாரம் காரணமாக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அலி அக்பர் சலேஹியின் இக்கருத்தை டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
2015 அணு ஒப்பந்தப் பிரகாரம் ஈரான் தனது அனைத்து விதமான அணுவாயுதத் தயாரிப்பு செயற்திட்டங்களையும் கைவிடுவதாகவும் பதிலாக அதன் மீதான முக்கியமான ஐ.நா மற்றும் சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகள் நீக்கப் படவும் உடன்படிக்கை எட்டப் பட்டிருந்தது. ஆனால் தற்போது ஈரான் இதில் திருப்தி ஏற்படும் விதமாக நடந்து கொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில் ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சலேஹி அளித்த தகவலில் தம்மால் 4 நாட்களுக்குள் 20% செறிவுடைய யுரேனியத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் ஆனால் அணு ஒப்பந்தம் சிதைவதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச அணுவாயுத ஆய்வாளர்களை ஈரானின் இராணுவத் தளங்களுக்கு எம்மால் அனுமதிக்க முடியாது எனவும் அணு ஒப்பந்தத்தில் இது கிடையாது என்றும் சலேஹி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சர்வதேச அணுசக்தி ஏஜன்ஸியான IAEA இன் இயக்குனர் யுக்கியா அமனோவினை டெஹ்ரானில் வைத்து சலேஹி, ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானி மற்றும் வெளியுறவு அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷரீஃப் ஆகியோர் சந்தித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஊடகப் பேட்டியின் போது றௌஹானி ஈரான் தொடர்ச்சியாகவே தமது நாட்டின் பாதுகாப்புக் கருதி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தும் எனவும் இது சர்வதேசத்துடனான அணு ஒப்பந்தத்தினை மீறும் ஒரு செயலாகத் தான் கருதவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்களுக்குள் யுரேனியம் அணுகுண்டு தயாரிப்போம்! : ஈரான்