Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரியாவில் கடந்த மாதம் ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தப் பட்ட பியாங்யாங் அணுவாயுத சோதனை மையத்தில் கட்டப் பட்டு வந்த சுரங்கம் இடிந்து கடந்த மாதம்  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஜப்பானின் அஷாகி என்ற தொலைக் காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

விபத்தின் போது 100 பேர் பலியானதாகவும் பின்னர் மீட்புப் பணிகள் நடைபெற்ற போது அப்போதும் விபத்து நேரிட்டு பலி எண்ணிக்கை அதிகமானதாகவும் இது 200 ஐத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அண்மைக் காலமாக வடகொரியா பல அணுவாயுதப் பரிசோதனைகளை நிகழ்த்தி வந்தமையினால் அதன் பரிசோதனைக் கூடம் பலவீனமாகி விட்டதாகவும் அதனால் தான் விபத்து நேரிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அணுப் பரிசோதனைகளில் செப்டம்பர் 3 ஆம் திகதி வடகொரியா இறுதியாகப் பரிசோதித்த 120 கிலோ டன் எடையுடைய ஹைட்ரஜன் குண்டும் அடங்குகின்றது. இந்த அணுகுண்டு 1945 ஆம் ஆண்டு ஹிரோசிமாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுகுண்டை விட 8 மடங்கு  சக்தி வாய்ந்தது ஆகும்.

இந்த அணுகுண்டுப் பரிசோதனையின் விளைவாக அதே தினம் சுமார் 6.3 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கமும் தொடர் அதிர்வுகளும் வடகொரியாவைத் தாக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சுரங்கத்துக்கு அண்மையிலுள்ள மண்டாப் என்ற மலையும் உடைந்து விழ வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் சீன எல்லைக்கு அருகேயும் கதிர்வீச்சு அபாயம் தோன்றலாம் எனவும் சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். முன்னதாக அணுவாயுதப் பரிசோதனைகள் காரணமாக இந்த மலைப் பகுதியில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தன.

அடுத்த வாரம் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக  தென்கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 பேர் வரை பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com