தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறிச் சென்று, தனித்துச் செயற்பட முனைவார்களானால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு- கிழக்கு தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஒட்டு மொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பும் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதே உள்ளது.
வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளனர். கூட்டமைப்பு பிளவுபடுவதை மக்கள் யாரும் விரும்பவில்லை. கூட்டமைப்பிலிருந்து வெளியேறி எந்த கட்சியாவது தனித்துச் செயற்படுமானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக செயற்பாடாகவே அமையும்.
இன்று தேசிய அரசியல் கட்சிகள் உள்ளுராட்சி தேர்தலை கருத்தில்கொண்டு தங்களது அமைப்பாளர்களை பிரதேசங்களில் நியமித்து தமது அரசியலை வடக்கு கிழக்கில் பலப்படுத்திவரும் நிலையில், கூட்டமைப்பு பிரிந்து நிற்குமானால் தமிழர்களின் பலம் உடையும் நிலையேற்படும். உள்ளுராட்சி சபை தேர்தல் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முக்கியத்துவமாக தேர்தலாக உள்ளதுடன், அது ஒரு பலப்பரீட்சையாகவும் இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to த.தே.கூ.விலிருந்து விலகினால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும்: எஸ்.வியாழேந்திரன்