அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மதிப்பளிக்காமல் செயற்படும் மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அவரை தோற்கடிப்பதற்கான வேலைத்திட்டத்தில் இறங்குவோம் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்தோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான தனது நிலைப்பாட்டை, மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்னொரு ஜனாதிபதித் தேர்தல் இருக்காது என மைத்திரிபால சிறிசேன, சோபித தேரரின் இறுதிக் கிரியையின் போது தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவாகவும் இருக்கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னொரு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமையைக் கொண்டிருக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை, அவர் கடைப்பிடிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமையை மைத்திரி இழந்துவிட்டார்: ஜே.வி.பி