Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறவுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கவுள்ளது.

பாராளுமன்றத்துக்கான பதவிக் காலம் இன்னமும் இரண்டரை வருடங்கள் இருக்கின்ற நிலையில், தனியாட்சி அமைப்பது தொடர்பிலான முடிவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வந்துள்ளது.

அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க விருப்பமுள்ள கட்சிகளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் 106 ஆசனங்களைக் கொண்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி தனியான அரசாங்கத்தை அமைக்குமாயின் அமைச்சுப் பதவிகள் 30 வரையும், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைவடையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இதுவரையில் தனியான அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையெனவும், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கம் கலைகிறது; தனியாட்சி அமைக்க ஐ.தே.க முடிவு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com