அண்மையில் பிரிட்டனில் வசித்து வந்த தனது முன்னால் ரகசிய உளவாளி மீது விஷ வாயுத் தாக்குதல் நடத்தி ரஷ்யா கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி பிரிட்டன் ரஷ்யத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது.
பதிலுக்கு ரஷ்யாவும் பிரிட்டன் அதிகாரிகளைத் திருப்பி அனுப்பி வைத்தது. இரு நாட்டுக்கும் இடையே ராஜ தந்திர உறவில் சற்று விரிசலை இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தமது ஆதரவை வியாழக்கிழமை பிரிட்டனுக்கு வழங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பில் தமது கண்டனங்களையும் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்குத் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசு பிரெக்ஸிட் வாக்கெடுப்பு மூலம் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில் ரஷ்ய விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் பிரிட்டனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தனது முன்னால் உளவாளி மீதான இந்த மோசமான தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதற்கு வேறு எந்த விளக்கமும் செல்லாது என்றும் இது தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாடு சரியானதே என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2 ஆம் உலக மகா யுத்தத்துக்குப் பின் விஷ வாயு மூலம் கொல்லப் பட்ட இரு நபர்கள் தான் ரஷ்ய முன்னால் உளவாளியும் மற்றும் அவரது மகளும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரகசிய உளவாளி மீது ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிரிட்டனின் எதிர்வினையை ஆதரிக்கும் ஐரோப்பிய யூனியன்