
நோர்வேயின் தெற்குப் பகுதியில் மரப்பாலம் இடிந்து விழுந்தததில் அப்பாலத்தில் பயணித்த இருவர் ஆற்றில் விழுந்த நிலையில் இருவரும் உயிருடன் மீட்கப்பட்பட்டனர்.ஓயர் (Øyer) நகரத்தில் இந்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணியவில் நடந்தது.மரப்பாலத்தின் ஊடாகப் பயணித்த மழுந்து ஒன்றும் பாரவூர்த்தியும் ஆற்றில் விழுந்தன. மகிழுந்து ஆற்றில் மூழ்கியது. பாரவூர்தி செங்குத்தாக விழுந்து கிடந்தது.இரு வாகனங்களிலிருந்தும் ஓட்டுநர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்...