Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் போர் நிறைவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கைது செய்த சிறீலங்கா இராணுவத்தினர் அவர்களை பல தொகுதிகளாக வன்னியிலும், தென்னிலங்கையிலும் உள்ள படை முகாம்களிலும், தடை முகாம்களிலும் தடுத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு வன்னியில் உள்ள இனம்தெரியாத தளம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களையும், இளைஞர்களையுமே படத்தில் காண்கிறீர்கள். ஈழம் நியூஸ் இனால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் எங்கே என்பது யாருக்கும் தெரியாது.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் .நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் பேசிய சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்கா தெரிவித்த தகவல்களில் பெரும் முரன்பாடுகள் காணப்படுவதுடன், சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களில் பெருமளவானோர் காணாமலும்போயுள்ளனர்.

0 Responses to வன்னியில் உள்ள படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள் எங்கே?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com