இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாக கிளம்புவதற்கு முன்பு செனட் சபையின் வெளியுறவு விவகார கமிட்டி உறுப்பினர்களிடையே பேசினார் ஹிலாரி.
அப்போது அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவுக்கு மிக முக்கிய, மிகப் பெரிய பங்கு உள்ளது. பிராந்தியப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய பிரச்சினைகளிலும் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
இவையெல்லாம் குறித்து நான் இந்தியப் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களுடன் விவாதிப்பேன்.
இந்தியாவுடன் மிகவும் விரிவா முறையில் ஆக்கப்பூர்வமான வகையில் எனது பேச்சுக்கள் அமையும்.
இந்தியா, அமெரிக்கா இடையே இதுவரை இல்லாத அளவு விரிவான முறையில் பேச்சுக்கள் அமையும் என்றார்
ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணபதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது: ஹிலாரி கிளிண்டன்
பதிந்தவர்:
தம்பியன்
17 July 2009
0 Responses to ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணபதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது: ஹிலாரி கிளிண்டன்