Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பமாட்டோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் அன்பழகன் சட்டமன்றத்தில் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் 19 ஆயிரத்து 705 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 451 தமிழர்கள் வசிக்கின்றனர். மொத்தம் 26 மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன.

1983ம் ஆண்டு முதல் 87 வரை முதல் கட்டமாகவும், 1989ம் ஆண்டு முதல் 91 வரை 2வது கட்டமாகவும், 1996 முதல் 2003 வரை மூன்றாவது கட்டமாகவும், 2006ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் தற்போது வரை நான்காவது கட்டமாகவும் தமிழகத்திற்கு அகதிகள் வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழ் அகதிகள் நலனுக்காக ரூ. 16 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இலங்கை தமிழ் அகதிகளை திரும்பி அனுப்பமாட்டோம் என்றார்.

0 Responses to இலங்கை தமிழ் அகதிகளை திரும்பி அனுப்பமாட்டோம்: தமிழக அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com