Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒருநாள்...

நான்அங்கிருந்தபோது ஒரு ஊர் கத்தோலிக்க குருவானவரைப் பற்றி ஏகப்பட்ட புகார்கள். அவரை அழைத்து விசாரிக்க வேண்டுமென அந்தப்பகுதி புலிகளின் பிரதிநிதியிடமிருந்து ஏக அழுத்தம். பிரபாகரன் அவரிடம் கேட்டது: ""அந்த ஃபாதர் விடுதலைக்கு எதிரா வேலை செய்யிற வரோ?''. ""இல்லை.'' ""அவர் நம்ம நாட்டு சட்ட-ஒழுங்குகள் எதையேனும் மீறினவ ரோ?''. ""இல்லெ, ஆனா அந்த கோயில் சனம் நிறைய கம்ப்ளைண்ட் சொல்றவங்கள்.'' ""அதையெல் லாம் விசாரிக்க அவங்கட திருச்சபை உயர் அதிகாரிகள் பிஷப்மாரெல்லாம் இருக்கிறாங்கள். நீர் உம்மட அலுவலெப் பாரும். உமக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்?''

நான் ஒரு குறிப்பிட்ட இந்திய அரசியற் கட்சியை குறிப்பிட்டபோது, ""அவையளைப்பற்றி நமக்கென்ன கதை ஃபாதர். அவையள் குசும்பு பிடிச்சவையள். ஆரும் சந்தோஷமா இருக்கிறது அவையளுக்குப் பிடிக்காது'' என்றார்.

இயல்பான அவரது மனம்தான் யுத்தகளத்தில் அப்படியொரு மகாபாரத உறுதியையும் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர் முதன் முதலில் மனம் கலங்கி உறைந்து போனது ஆகஸ்ட் 14, 2006 அன்று. அவரது தனிக்கோயிலான, யுத்தம் அனாதைகளாக்கிய சின்னஞ்சிறு பிஞ்சுகளை தன் சொந்தப் பிள்ளைகளிலும் மேலாகப் பேணி அவர் அடைகாத்து வளர்த்த "செஞ்சோலை' மீது இலங்கை விமானப்படை குண்டு வீசிய நாள் அது. 61 பிள்ளைகள் கண நேரத்தில் சதைத்துண்டுகளாய் சிதறினார்கள். இந்த செஞ்சோலை பற்றி என்னோடு உரையாடுகையில் அவரிடத்து சாந்தம் படர்ந்தது. ""அங்கு போனால் எனக்கு அமைதி கிடைக்கும். கடுமையான காலங்களில் நான் அங்கு போவேன், அமைதியடைந்து திரும்புவேன்'' என்றார்.

இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் கடந்த இருவார காலமாய் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் சமாச்சாரம் ஆங்கிலத்தில் LGBT என அறியப்படுகின்ற ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாற்கூறுடையவர்கள் மற்றும் அரவாணி கள் தொடர்பான அரசியற்சட்ட எண் 377 பற்றியது. காலனியாதிக்கத்தின் நீட்சியாய் தொடர்கிற இந்தியாவின் அரசியற் சட்டம், கஏஇப LGBT (Lesbian, Gay, Bi Sexual and Transgender) குழுமத்தினரின் பாலியல் ஈர்ப்பினை குற்றச் செயலாகவும் சட்டத்தின் முன் தண்டனைக் குரியதாகவும் இதுநாள் வரை நிறுவி நிற்கிறது. இதனை மாற்ற வேண்டுமென்பதுதான் இப்போது நடக்கிற முயற்சிகளும், விவாதங் களும்.

இதுபற்றி என்னிட மும் கருத்துக் கேட்ட டெக்கன் கிரானிக்கல் DECCAN CHRONICAL ஆக என்ற ஆங்கில நாளிதழுக்கு நான் கூறியிருந்தேன், ""அர சியற் சட்டப்பிரிவு எண் 377-ஐ திருத்தும் யோச னையானது இந்திய சட்ட அமைப்பினை மனிதப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க் கப்பட வேண்டுமே யொழிய ஓரினச் சேர்க்கைக்கு ஒழுக்க அங்கீகாரம் வழங்குவ தாகக் கருதப்படக்கூடாது. ஓரினச் சேர்க்கை இயற்கையின் இயல்பான விதிகளுக்கும், மானுடம் காலாதி காலமாய் போற்றிவரும் மிகவும் அடிப்படையான ஒழுங்குகளுக்கும் முரணனானது'' என்றேன்.

அதேவேளை அவர்களுக்கு அறிவுரை, ஆற்றுப்படுத்தல், மருத்துவ உதவிகள் தந்து தோழமை நேயத்துடன் வழிநடத்த வேண்டு மேயன்றி அவர்களை குற்றவாளிகளாக சிறையிலடைக்க முடியாது என்றும் வலியுறுத்தினேன்.

பொறாமை தவறு. புறணி பேசுதல் தவறு. குண்டணி, கோள் மூட்டுதல் தவறு, பல் விளக்காது நாறுதல் தவறு, வீட்டை குப்பையாக வைத்திருத்தல் தவறு, பக்கத்து வீட்டு பெண்ணை இரகசியமாக வக்கிரமாய் பார்த்தல் தவறு. ஆனால் இவற்றையெல்லாம் அறிவுரை, கற்பித்தல் மூலம் திருத்த வேண்டுமேயன்றி சிறையிலடைத்து சரி செய்ய முடியாதென்பதே சரியான கருத்து. சட்டங்கள் குறைவாகவும், கண்காணிப்போர் அதிகமின்றி மக்கள் இயல்பிலேயே நல்லவர்களாக வாழும் நாடே சிறந்த நாடு.

எனது இந்தக் கருத்தினை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, ""கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு இயக்கம்'' என்ற அமைப்பு கொஞ்சம் விளம்பரம்தேடப் புறப்பட்டிருக்கிறது. இதே அரைவேக்காட்டுப் பரிதாபங்கள்தான் இசைஞானி இளையராஜாவுடன் ""சிம்பொனி யில் திருவாசகம்'' செய்தபோதும் "கத்தோலிக்க பாதிரியார் சிவனைப் போற்றும் திருவாசகத் திற்காய் ஏன் பணம் செலவழித்து உழைக்க வேண்டும்?' என்றெல்லாம் கேள்வி கேட்டு கடிதங்கள் எழுதிப் பொழுது போக்கினார்கள். போப்பாண்டவர் வரையெல்லாம் எழுதிப் போட்டு காமெடி செய்து பார்த்தார்கள். எங்குமே பருப்பு பெரிதாக வேகவில்லை. எனது வாழ்வில் நான் முரட்டுத்தனமான பிடிவாதத்தோடு மூர்க்கம் காட்டும் ஓரிரு விஷயங்களில் ஒன்று -மத அடிப்படைவாதிகளுக்கு அடிபணிவதில்லையென்பது. எனது 23-ம் வயதில் இத்தகையோரைப் பற்றி ஆய்வு செய்து ""போலிகளோடு போர்'' எனத் தலைப்பிட்டு 140 பக்க அறிக்கையை புத்தகமாக வெளியிட்டேன். என்னைப் பொறுத்தவரை நேசமும், இரக்கமும், மன்னிப்பும், தியாகமுமே வேதத்தின் உயிர் பொருட்கள் -உயர் பொருட்கள், சட்டங்களும் சம்பிரதாயங்களு மல்ல.

பைபிளில் "பரிசேயர்கள்' என்றொரு கும்பலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இடைவெளி கிடைக்கிற இடங்களி லெல்லாம் இயேசுநாதர் இவர்களை ஒரு பிடி பிடிப்பார். ""குடிகாரர், விபச்சாரிகள், பாவிகள் இவர்களெல்லாம் பரலோகம் போவார்கள், ஆனால் இந்தப் பரிசேயர் களால் பரலோகம் இருக்கிற திசையெட்டில் கூட போகமுடியாது'' என்று பொருள்படும் தொனியில் பேசுவார். இப்பரிசேயர்கள் "உள்ளே உயிர் இல்லாது வெறும் எலும்புக் கூடுகளாகிப்போன வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள்' என்று சாட்டையடிப்பார். இத் துணைக்கும் "பரிசேயர்கள்' உலகத்தின் பார்வைக்கு மிக நல்லவர்கள். சட்டத்தை பிசிறின்றி கடைபிடிப்பவர்கள். தினம் ஐந்துமுறை பிரார்த்தனை, வருவாயில் ஒரு பகுதி கோவிலுக்கு, நோன்பென்றால் எச்சில்கூட விழுங்க மாட்டார்கள்... இத்தகையோரை மோசமானவர்கள் என்று நாம் சொல்ல முடியுமா? ஆனால் இயேசுநாதருக்கு இவர்களைப் பிடிக்கவில்லை.

ஏனென்றால் இவர்கள் மமதை கொண்டி ருந்தவர்கள், இரக்கமும் அன்பும் காட்டத் தவறிய கடின மனம் கொண்டவர்கள், வேதத்தின் சட்டப் புத்தகத்தில் இருக்கிறபடி சடங்கு களை செய்தால் போதும் -சக மனிதர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதியவர்கள் -எனவே "கடவுளுக்கு அருகில் ஒருபோதும் இவர்கள் வர முடியா'தென முழங்கி னார் இயேசு. அன்றைய பரிசேயர் கள்தான் இன்றைய விசுவாசப் பாதுகாப்பு அடிப்படைவாதப் படையினர்.

வேலுப்பிள்ளை பிரபாகர னும் அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் படைத்த போர்க்களச் சாதனைகளை உலகறியும். ஆனால் அவற்றினும் ஆழமாய் அவர்கள் படைத்த சமூக வரலாறு, பலநூறு ஆண்டுகளாய் தமிழ்ச்சமூகம் விடுபட முடியாதபடி விலங்கிடப் பட்டிருக்கும் சில கொடுமைகள், மூடமைகளின் கண்ணிகளை உடைத் தெறிவதாய் அமைந்தது. பரிசேயத் தனங்கள் பலவற்றைத் தகர்த்தது.

விடுதலைப்புலிகள் இயக் கத்திற்குள் பொதுவில் எவரும் ஜாதி பேதம் பார்க்கவில்லை. பலருக்கு யார் என்ன சாதி என்பதே தெரியாது. இயக்கத்தில் சேர்ந்ததும் பெயரை வேறு மாற்றிவிடுவார்கள். ""உங்கள் இயக்கம் கலப்புத் திருமணங்களை ஊக்கு விக்கிறதா?'' என்று பிரபாகரன் அவர்களைக் கேட்டேன்.

பாசாங்கற்ற பாங்குடன் இக்கேள்விக்கு அவர் தந்த எளிமையான, நெகிழ்வோட்டம் கொண்ட, ஆனால் மிகவும் ஆழமான பதிலையும் அப்பதிலை அவர் வெளிப்படுத்திய விதத் தையும் இப்போது நினைத் தாலும் வியப்பாக இருக்கிறது.

இதுதான் அவர் சொன் னது;

""எங்கள் இயக்கத்தில் சாதி பார்த்துத் திருமணமெல்லாம் இல்லை. கலப்புத் திருமணத்தையே ஏதோ பெரிய சாதனையாக சொல்லும் தன்மை கூட எங்களிடையே இல்லை. ஏனென்றால், எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேரும் ஏற்பாடு, அவ்வ ளவுதான்!'' உள்ளபடியே இப் பதிலில் வெளிப்பட்ட எளிமை யையும் பாசாங்கற்ற தன்மை யையும் முதிர்ச்சியடைந்த பண்பாட்டுக் குறியீடாகவே பார்த்தேன்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை சிரத்தையுடன் பேணிய அந்த அமைப்பு மனித உணர்வுகளின் பெருவெளியில் மென்மையோடு நடந்து கொண்ட முகம் உலகிற் குத் தெரியாது. ""ஆக, காதலிக்கும் உரிமை இயக்க உறுப்பினர் களுக்கு உண்டு?'' என்று அவரை நான் கேட்டேன். ""ஆம், தவ றிழைக்கும் உரிமைதான் இல்லை. உண்மையாக ஒருவருக்கொருவர் விரும்புவதை, காதலிப்பதை இயக் கம் தடை செய்வ தில்லை'' என்றார்.

வரதட்சணை வழக்கையும் விவாதித்தோம்.

""விடுதலைப்புலிகள் இயக் கம் வரதட்சணை வழக்கினை உறுதியாக நிராகரிக்கிறது. வரதட்சணை வாங்கி திருமணம் செய்கிற போ ராளிகளை இயக்கத்தை விட்டே நீக்கிவிடுகிறோம்'' என்றார்.

""மக்களைப் பொறுத்த வரை எங்கள் ஆளுகைப் பகுதிகளில் சீதன தடைச் சட்டம் இருந்தாலும் சட் டத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியுமென நான் நினைக்கவில்லை. கற்றுக் கொடுத்தல், விழிப்புணர்வு முகாம்கள், உறுதியான சாதி ஒழிப்பு நடவடிக்கை கள் மூலமாகத்தான் வர தட்சணை பிரச்சனையை பேரளவுக்கு ஒழிக்க முடியும்'' என்றார்.

போராட்ட அமைப்பு என்று வருகிறபோதுதான் அவர் இறுக்கம் காட்டி னாரேயன்றி தனிமனிதனாய் அவர் மிக மிக நெகிழ் வானராயிருந்தார். யாவரும் இன்புற்றிருத்தலே வையத் தின் பயனாகவும், நெறி யாகவும் இருக்க வேண்டு மென்ற கொள்கையுடையவ ராகவும் இருந்தார் என்றே நான் கருதுகிறேன்.

இதுபற்றி அவருக்கு நெருக்கமான பலரிடமும் நான் விவாதித்தேன். அவர்களில் பலர் கூறிய ஒன்றை உங்களிடம் நான் பகிர வேண்டும்.

(நினைவுகள் சுழலும்)

0 Responses to காதல்... கல்யாணம்... வரதட்சனை! பேசுகிறார் பிரபாகரன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com