சென்னையில் வைகோ எழுதிய "குற்றம் சாட்டுகிறேன்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். கவிஞர் இன்குலாப் நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் பேசிய பழ.நெடுமாறன்,
விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்திடம் தோற்க வில்லை. 20 நாடுகள் உதவியுடன் நடத்திய போரை எதிர்த்து போராடியதால் விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆனால் எந்தவொரு நாடும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை.
தாயக தமிழர்களும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும், ராஜபக்சேவின் கொடுங்கோல் ஆட்சியின் முகமூடியை கிழித்தெறியும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களையும், உலக நாடுகளையும் திரட்டி, அடுத்த கட்ட போராட்டத்தை நடத்திட வேண்டும்.
இந்திய அரசின் முகமூடியை கிழித்தெரியும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
இலங்கையில் மனிதம் கொல்லப் படுகிறது. வதை முகாமில் தினந்தோறும் 200 பேர் உயிரிழக்கின்றனர். இந்த கொடுமையை தடுத்து நிறுத்த இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட வேண்டும்.
இதற்கான இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கக் கூட்டம் வரும் 19ம் தேதி நடக்கிறது என்றார்.
0 Responses to விடுதலைப்புலிகள் தோற்க வில்லை: பழ.நெடுமாறன்