Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெற்கில் பல புலி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதால் கண்காணிப்புகளை அதிகரித்து அவர்களைக் கைது செய்வதற்காக விஷேட போலீஸ் பிரிவுகள் செயற்படுத்தப்படவுள்ளதாம்.

போலீஸ் திணைக்களத்தின் இரண்டாம் நிலை பாதுகாப்பு அமைப்பானது கடந்த மூன்று மாதங்களாக செயற்படாத நிலையில் உள்ளதாகவும் அவற்றை மீளவும் செயல் நிலைக்கு மாற்ற உள்ளதாகவும் போலீஸ் பேச்சாளர் நிமால் மெடிவகா கூறியுள்ளார்.

புலிகளைத் தோற்கடிப்பதில் இந்த போலீஸ் பிரிவினர் புலனாய்வுத் த்கவல்களைத் திரட்டியதன் மூலம் பல பங்களிப்புகளைச் செய்தவர்கள் என்றும் ஆனால் வெற்றியடைந்ததன் பின்னரான 3 மாதமாக அவர்கள் ஓய்வு நிலையில் உள்ளதாகவும் மேலும் கூறினார். ரத்னபுரி, அவிசாவளை, கேகாலை, பதுளை, பண்டாரவளை, லுனுகல, குருனாகலை, குளியாபிட்டியா, நிகாவெரட்டியா, கெகிரவா, தம்புட்டுகம, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, எல்பிட்டியா, அம்பலாங்கொடை, தங்கலை, அம்பாந்தோட்டை ஆகிய பிரிவுகளே தற்போது செயற்படாத நிலையில் உள்ளன.

பெருமளவு எண்ணிக்கைகையான புலிகள் இலங்கையின் தெற்குப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளார்கள். எனவே போலீசார் உசார் நிலைப்படுத்தப்பட்டு, விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் போலீஸ் பேச்சாளர்.

0 Responses to தெற்கில் ஊடுருவியுள்ள புலிகளைக் கண்டுபிடிக்க விஷேட போலீஸ் பிரிவுகள்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com