இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஜான் பிரபாகரர் (42). தமிழரான இவர் கடந்த 1994-ம் ஆண்டு இலங்கையில் இருந்து சென்னை வந்தார்.
எழும்பூர் ஓட்டலில் தங்கியிருந்தபோது போலீசார் சோதனையில் ஜான்பிரபாகர் போலி பாஸ்போர்ட்டில் தமிழகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும் நண்பர்களையும் போலீசார் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். ஜாமீன் பெற்ற ஜான்பிரபாகர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 15 வருடமாக ஜான்பிரபாகரை சி.பி.ஐ. தேடி வந்தது. அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள குடியுரிமை காப்பு அலுவலகத்தில் அவரை பற்றிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஜான்பிரபாகர் மயிலாப்பூர் பகுதியில் பதுங்கி இருந்து தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் மயிலாப்பூர் பங்களா வீட்டில் தங்கியிருந்த ஜான்பிரபாகரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ஜான் பிரபாகருக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா? என கியூபிராஞ்ச் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
0 Responses to 15 வருடம் தலைமறைவாக இருந்த இலங்கை தமிழர் கைது